திங்கள், 16 ஆகஸ்ட், 2010

ஆஹா! என்ன சுதந்திரம் நம் நாட்டில்!

சுதந்திரத்தினால் வந்த சுதந்திரம்!
 

குண்டு துளைக்கா கூண்டில்
கொடியேற்றும் பாரதப் பிரதமர்
வெறும் வாய்மொழி உரை வீச்சு
தொடரும் காஷ்மீர் வன்முறை
தொடரும் பிரிவினை வாத  வன்முறை
தொடரும் கல்விக் கட்டணக் கொள்ளை
கர்நாடக சுரண்டல் பிரச்சினை
தொடரும் முல்லை பெரியாறு பிரச்சினை
கிடப்பில் கிடக்கும் நதி நீர் இணைப்பு திட்டம்
ஓய்ந்து போன சேது சமுத்திர திட்டம்
இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்
விலை போகும் பாரத சட்டம் 
கையூட்டுக்கு கையேந்தும் சிபிஐ(போலீஸ் குரூப்)
போபால் பிரச்சினையில் மானகெட்ட
வெக்கங்கெட்ட இந்திய அரசாங்கம் 

சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டுப் பிரச்சினை
காயும் வயிறுகள் சாகும் நிலையில்
ஒரு வேலை உணவு வாய்க்கு
எட்டாத விலைவாசி
தேவை இல்லாத
பெரு முதலாளி அரசுச் சலுகைகள்
தொடரும் அரசியல் சலுகைகள் மக்கள் பணத்தில்
தொடரும் அரசியல் குடும்பத் திருட்டு 
தொடரும் கௌரவக் கொலைகள்
தொடரும் அரசியல் கொலைகள்
தொடரும் கந்து வட்டிக் கொடுமைகள்
தொடரும் தீண்டாமை கொடுமைகள்
தீண்டாமை வேண்டாம் பாடப் புத்தகத்தில்
தீண்டாமை வேண்டும் அரசியல் சதுக்கத்தில்
 இன்றும் எத்தனை ஆயிரம் உத்தமபுரங்கள்
நம் பாரதத்தில்...
சாதிகள் ஒழிய வேண்டும்
இது பாரதி கனவு
சாதிவாரி கணக்கெடுப்பு 
இது நம் அரசின் நனவு
தாயாய் மதிக்கும் நம் நாட்டில்
பெண்ணியல் வன்முறை கொடுமைகள்
ஏராளம்....
 

இதுதான் நடக்கிறது நம் பாரதத்தில்...
பழம்பெருமை பாரதத்தின்
புதிய
பெருமையில் வறுமையே மிஞ்சுகிறது
 

சுதந்திரத்தின் பொருள் தெரியுமா நமக்கு?
பெற்றுத் தந்தவர்களே பெற முடியும்
சுதந்திரத்தின் சுவாசத்தை ...

முட்டாள் ஆனா நம் மக்களுக்கு  சுதந்திரம்
இருந்தால் என்ன!... செத்தால் என்ன!?....





வெறும் வார்த்தையால் வேண்டாம் சுதந்திரம்
உண்மையான சுதந்திரத்திற்கு பாடுபடுவோம்...
 

வாழ்க பாரதம்!
வளர்க நாட்டுப்பற்று!  


எண்ணங்கள் தொடரும்.....

உங்கள் செல்வநாயகம்.         

வெள்ளி, 30 ஜூலை, 2010

இந்தியா எப்படி வல்லரசாகும் ??!

இன்றும் கந்தல் துணியில் மானம் காக்கும்
கடைக்கோடி நம் மக்கள் ...

இன்றும் உழவும் உலவும் நாட்டினிலே

உழவை மறக்கும் நம் மக்கள்...

இன்றும் ஒரு கை அண்ணம் பாராமல்

சாவை நோக்கும் நம் மக்கள்...

இன்றும் ஊழல் பெருத்த சமூகத்தில்

உறக்கம் தொலைக்கும் நம் மக்கள்...

இன்றும் பிளாட்பாரம் , சாக்கடையில்

கொசுக்களுக்கு தீனியாய் நம் மக்கள்...

இன்றும் குடியைக் கெடுக்கும் குடியால்

உயிரை வெறுக்கும் நம் மக்கள்...

இன்றும் கல்வி வெறும் காட்சிப் பொருளாய்

தூரத்தில் தொலைந்த நம் மக்கள்...

இன்றும் ஆட்சிகள் மாறினாலும்

அவலங்கள் மாறாத நம் மக்கள்...

இன்று படித்தாலும் வேலையில்லை படிப்பதற்கும்

வழியில்லை, பரிதவிப்பில் நம் மக்கள்...

இனி எல்லாம் தனியார் மயமாய், அரசை நம்பி

மோசம் போகும் நம் மக்கள்...

இன்றும் என்றும் ஆட்சிகள் மாறினாலும், அரசை ஆளா

சிந்தை மலிந்த நம் மக்கள்...

பிறகெப்படி இந்தியா வல்லரசாகும் ??!...


புதிய தேசம் கண்டிடுவோம்

புதிதாய் வாழ முற்படுவோம்...


உங்கள் செல்வநாயகம்              

வியாழன், 29 ஜூலை, 2010

மனிதனாய் வாழ மறந்தோமே??!

ஒருமுறை ஜனனம்
ஒருமுறை மரணம்
அதற்குள் எத்தனை பிரிவினைகள்...

சாதி மதம் பேதம் கொண்டு
சாக்கடை நீரின் தெளிவைக் கண்டு
ஆள(நாட்டை) வர்க்கப் போராட்டம் ... 

மனம் மறந்து பணம் தேட
குணம் மாறித் திரிகின்றோம்
வாழும் காலம் அறியாமல்
வீழும்(மண்ணில்) காலம் அறிகின்றோம்...

அகம் ஒருபுறம், புறம் ஒருபுறம்
இரண்டும் நடத்தும் நாடகத்தால்
மனிதன் தினமும் தோற்றுப் போரானே!...

புன்னகை முகம் சிறுநகை செய்ய
உண்மை மறைத்துப் பொய்மை செழிக்க
மண்புகும் உடலுக்கு
என்ன ஆயிரம் ஒப்பனைகள்...

ஆனால்...

வீழத் துடிக்கும் ஒரு நிமிடம்
நெஞ்சம் விம்மிச் சொல்லும் ஒரு சொல்
அட, மனிதனாய் வாழ மறந்தோமே??!...     
உங்கள் செல்வநாயகம்

சனி, 17 ஜூலை, 2010

என்னங்க மொதல்ல இதப்படிங்க...

உழைக்கும் கருவியெய் மறவாதே !
தினம் தினம் புதுமை வரினும்
மாறாதது பழமை ஒன்றே ...
பழமை புதுமை இரண்டும் ஒன்றே
உழைப்பால் !.......

என்றும் உழைப்பே  முதன்மைப்பட
உழைப்பவர்கள் இன்றும் கஷ்டப்பட....
உண்டு பெருத்த அட்டைப்பூசியாய்
என்றும் பெரு முதலாளிசனம் .....

உழைக்கும் வர்க்கம் உறங்கப்போனால்
உண்டிக்கு வழியில்லை,
உண்மையைச் சொன்னால் ...

விழித்தெழும் உலகப்பெருமுதலாளி சனமே
உழைக்கும் கைகளை மறந்தால் , நாளை
பிழைக்கும் நாதியற்று மடிவாய் ....

ஒருவேளை சோறு எட்டாக்கனியாக ,
வெறும் ஆட்சி, அதிகாரம் இருந்து என்னபயன்...
நீ! வானூர்தியில் பறந்தாலும்
வந்திறங்குவது  எம் உழைக்கும் மண்ணில் தான்...
மறவாதே!......

நாடு (விதையில் இருந்து ) விடுதலை பெற்றும்
விளைய மறுக்கும் ஜனநாயகம் (செடியாய் )
இன்றும் பணநாயகம் ....
ஒரு நொடி நினைப்பீர் , உழைக்கும் மக்களின் துயரங்களை....

வாழ்க உழைக்கும் வர்க்கம்!
வாழ்க உண்மை ஜனநாயகம் !

உள்ளக்குமுறல் : உங்கள் செல்வநாயகம்.     

வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஓடும் உசிரின் அழியும் கால்தடம்

கால்வயிறு கஞ்சியில்லை
கண்ணுறங்க கணமுமில்லை!
நடந்துசெல்ல பாதையில்லை 
நடைபயில தெம்புமில்லை!
என்னமோ சொல்கிறார்கள் 
காதில் எதுவும் ஏறவில்லை! 
கொஞ்சம் உற்றுபார்த்தாலும்
என்னவென்று   தெரியவில்லை! 
வேளாவேளை  நடக்கிறது 
மனம் வெயில்பட்ட புழுவாய்! 
மழையென்ன  பனியென்ன
இந்த தோலு செத்துபோச்சு 
என்னத்தசொல்ல!
நாலு எலும்பு  நாலுநொடி
 இன்னைக்கோ நாளைக்கோ 
நாளைவரைக்கும்  இருந்தா பரவாயில்லை 
நாலுவார்த்தை பேச என் உசிரு?...